NEWS NEWS Author
Title: பூஜை அறை அமைப்பதற்கான சில எளிய குறிப்புகள் !!
Author: NEWS
Rating 5 of 5 Des:
  வீட்டிற்கான பூஜை அறை எப்பொழுதும் வடகிழக்குப் பகுதியில் இருந்தால், இறையருள் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். அப்படி அமைக்க முடியாத பட்சத்தி...

 

வீட்டிற்கான பூஜை அறை எப்பொழுதும் வடகிழக்குப் பகுதியில் இருந்தால், இறையருள் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். அப்படி அமைக்க முடியாத பட்சத்தில் மேற்கு மத்தியில் அமைத்து கிழக்கு பார்த்தவாறு சாமி படங்களை வைத்துக் கொள்ளலாம்.




பூஜை அறையில் உள்ள சாமி படங்கள் கிழக்கு அல்லது வடக்கு திசையை பார்த்து இருக்க வேண்டும். குறிப்பாக பூஜை அறைக்கு மேல் பரண், படிக்கட்டு அமையக்கூடாது.


பூஜை அறை தரைதளத்தில் இருந்தால் அதற்கு நேர் மேலே, அதாவது முதல் தளத்தில் டாய்லெட், பாத்ரூம் மற்றும் பெட்ரூம் ஆகியவை வரக்கூடாது. பூஜை அறைக்கு பக்கத்திலே டாய்லெட் மற்றும் பாத்ரூம் வரக்கூடாது.


பூஜை அறையை வடகிழக்கில் அல்லது மேற்கு மத்தியில் அமைக்க முடியாத பட்சத்தில் #வரவேற்பறையில் அல்லது சமையலறையில் சாமி படங்கள் கிழக்கு அல்லது வடக்கு பார்த்து அமைத்துக்கொள்ளலாம்.



படுக்கையறையில் பூஜை அறை அமைக்கக்கூடாது. அப்படி படுக்கை அறையில் அமைத்தால் அந்த அறையின் வடகிழக்கு பகுதியில் அமைக்கலாம். அதிலும் குறிப்பாக நாம் படுத்து உறங்கும் போது நம் கால் எதிரே சாமி படங்கள் அமைவதுபோல் இருக்கக்கூடாது.


உடைந்த சாமி படங்களை உடனடியாக அகற்ற வேண்டும். பூஜை அறைக்கான நிறம் பளபளப்பாக இருக்க கூடாது. மாறாக வெள்ளை, வெளிர் மஞ்சள் அல்லது வெளிர் நீலம் இது போன்று இருக்கலாம்.


சாமி படங்களை எதிரும் புதிருமாக வைக்கக் கூடாது. பூஜை அறைக்கு #இரட்டைக்_கதவு அமைப்பு சிறப்பு.


பிரமிட் வடிவிலான கூரை அமைப்பு நல்ல ஆற்றல்களை அதிகரிக்கும். பூஜையறையில் உள்ள சாமி படங்கள் எப்போதும் தரையிலிருந்து ஒரு அடிக்கு மேல் தான் அமைக்க வேண்டும்.

Advertisement

 
Top