NEWS NEWS Author
Title: நீண்ட வருடம் குழந்தை இல்லாதவர்கள் வெள்ளிக் கிழமையில் செய்ய வேண்டியது என்ன? பிள்ளை வரம் தரும் வெள்ளிக்கிழமை வழிபாடு!
Author: NEWS
Rating 5 of 5 Des:
  திருமணம் ஆனதும் ஆகாததுமாக முதலில் நம்மிடம் கேட்கப்படும் கேள்வி விசேஷம் ஏதும் இல்லையா? என்பது தான். திருமணம் ஆனதும் எல்லோருக்கும் இவ்வரம் க...

 

திருமணம் ஆனதும் ஆகாததுமாக முதலில் நம்மிடம் கேட்கப்படும் கேள்வி விசேஷம் ஏதும் இல்லையா? என்பது தான். திருமணம் ஆனதும் எல்லோருக்கும் இவ்வரம் கிடைத்து விடுவதில்லை! இன்றைய மாறி வரும் சூழ்நிலைக்கு ஏற்ப பெரும்பாலான தம்பதிகளுக்கு குழந்தை வரமும் தள்ளிப் போய் கொண்டே இருக்கிறது. நாம் சாப்பிடும் உணவு பழக்கம் முதல் சுற்று சூழல் வரை அனைத்துமே இக்குறைபாட்டுக்கு காரணமாக இருக்கிறது. நல்ல ஆரோக்கிய உணவை எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த பிரச்சனைகளில் இருந்து ஓரளவுக்கு நிவாரணம் காணலாம். இருப்பினும் தெய்வ அருள் இல்லாதவர்கள் வெள்ளிக்கிழமையில் இதை செய்தால் இறையருளால் பிள்ளை வரம் பெறலாம் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. அப்படியான ஒரு எளிய வழிபாடு என்ன? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம். 

 அம்மனுக்கு வளையல் சாற்றி பெரு விசேஷமாக கொண்டாடப்படுவது உண்டு. இதனால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்றும், கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆகும் என்கிற நம்பிக்கையும் உண்டு. அது போல அம்மனுக்கு நீங்கள் பச்சை நிற அல்லது சிகப்பு நிற வளையலை வெள்ளிக்கிழமையில் சாற்றி வேண்டிக் கொள்ளலாம். இதனால் குழந்தை வரும் சீக்கிரமே கிடைக்கும் என்பது நியதி! அது மட்டுமல்லாமல் வெள்ளிக் கிழமையில் நீங்களும் சிகப்பு நிற அல்லது பச்சை நிற வளையலை அணிந்து கொண்டு, வெள்ளி தோறும் நெய் விளக்கு ஏற்றி வந்தால் அம்மனின் அருளை பெறலாம். அன்றைய நாளில் ஒரு வேளை விரதமிருந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற புடவை கட்டி, சர்க்கரை பொங்கல் நைவேத்யம் படைத்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு படையலை தானம் செய்து வந்தால் தீராத பிரச்சனை எல்லாம் ஒரு முடிவுக்கு வரும். 

 கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் நீங்கள் வீட்டிலேயே எளிமையாக இதை செய்யலாம். காலையில் எழுந்ததும் குளித்து முடித்துவிட்டு முதல் வேலையாக அடுப்பில் பாலை தான் காய்ச்ச வேண்டும். காய்ச்சிய பாலை ஒரு டம்ளர் கொண்டு போய் பூஜை அறையில் வையுங்கள். அம்மனுக்கு பால் வைத்து மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். எத்தகைய பாவங்களையும், தோஷங்களையும் நிவர்த்தி பெற செய்து குழந்தை வரம் கிடைக்க வேண்டிக் கொள்ளுங்கள். சிறிது நேரத்திற்கு பிறகு அந்த பாலை நீங்கள் பருகிவிடலாம். சர்க்கரை மற்றும் தண்ணீர் எதுவும் சேர்க்காத பாலாக இருக்க வேண்டும். முடிந்த வரை பசும்பாலாக இருப்பது நன்மை தரும். இதையும் படிக்கலாமே: பணத்தைத் தேடி நீங்கள் ஓடாமல் பணம் உங்களைத் தேடி ஓடி வர இந்த ரகசிய ஐந்து தாந்திரீக முறைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

Advertisement

 
Top