அஷ்டமி தினத்தில் ராகு காலத்தில் பைரவரை வழிபாடு செய்ய வேண்டும். திங்கட்கிழமை ராகு கால நேரமானது காலை 7.30 மணியிலிருந்து 9.00 மணி வரை இருக்கின்றது. இந்த நேரத்தில் சிவன் கோவிலுக்கு சென்று அங்கு இருக்கும் பைரவருக்கு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, உங்கள் கடன் பிரச்சனையை வைரவரிடம் மனதார சொல்லி அந்த பிரச்சனை சீக்கிரம் சரியாக வேண்டும் என்று பிரார்த்தனை வைக்க வேண்டும். நல்லெண்ணெயில் திரி போட்டு விளக்கு ஏற்றலாம். அல்லது சிவப்பு துணியில் 27 மிளகுகளை வைத்து கட்டி அந்த விளக்கையும் இந்த ராகு கால நேரத்தில் பைரவருக்கு ஏற்றலாம். உங்களால் எது முடியுமோ அதை செய்யுங்கள். முந்திரிப் பருப்பு, தயிர் சாதம், இவைகளை பைரவருக்கு நிவேதனமாக வைக்கலாம். நிவேதனமாக வைத்த பொருட்களை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கலாம். வீட்டில் இருப்பவர்களும் சாப்பிடலாம். பைரவருக்கு சிவப்பு நிற பூ மிக மிக உகந்தது. உங்கள் கைகளால் சிவப்பு நிற பூக்களை பைரவருக்கு கொண்டு போய் கொடுங்கள். -
எல்லா பழமையான சிவன் கோவில்களிலும் தேய்பிறை அஷ்டமி அன்று மாலை நேரத்தில் சிறப்பு அபிஷேகங்களும் வழிபாடுகளும் நடக்கும். அந்த நேரத்தில், அந்த பூஜையில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும். சிறிது நேரம் சிவன் சன்னிதானத்தில் அமர்ந்து மனதை ஒருநிலைப்படுத்தி கஷ்டங்கள் தீர வேண்டிக் கொள்ளுங்கள். இதையும் படிக்கலாமே: சம்பளம் வாங்கியவுடன் இந்த மூன்று பொருட்களை மட்டும் வாங்கி வீடாதீர்கள். இதனால் பணம் கையில் தாங்காமல் வீண் விரையும் ஆகிக் கொண்டே இருக்கும். காலத்தால் உண்டாக்கப்படும் கஷ்டங்களை அந்த கால பைரவரால் தான் சரி செய்ய முடியும். முழு நம்பிக்கையோடு வரும் திங்கட்கிழமை தேய்பிறை அஷ்டமியில் எவரொருவர் பைரவரின் பாதங்களை சரணடைகிறார்களோ, அவர்களுடைய கஷ்டத்திற்கு அந்த பைரவர் பொறுப்பேற்றுக் கொள்வார். கஷ்டங்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும். நம்பிக்கை உள்ளவர்கள் சிறப்பு வாய்ந்த இந்த ஆன்மீகம் வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம்.