அடுத்து கடன் கொடுப்பது, கடன் வாங்கினால் கொடுக்கத்தான் வேண்டும் இதில் எந்த வித மாற்று கருத்தும் கிடையாது. சம்பள பணம் கைக்கு வந்தவுடன் முதலில் கடனுக்காக பணத்தை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். இதை செய்வதால் பணம் கையில் தாங்காமல் செலவழிந்து விடும். அடுத்ததாக அநாவசிய செலவுகளை தவிர்க்க வேண்டும். அதாவது சம்பளம் வாங்கியவுடன் ஆடை அணிகலன்கள் போன்றவற்றை வாங்குவதை தவிர்க்க வேண்டும். அவசியம் இருப்பினும் முதல் செலவாக செய்யாமல் அதை பிறகு வாங்கி கொள்வது நல்லது. இதனால் வீண் விரயங்கள் தவிர்க்கப்பட்டு பணம் சேரும். சம்பளம் கைக்கு வந்தவுடன் நாம் வாங்கும் முதல் பொருட்கள் இந்த வகையில் சம்பளம் வாங்கியதும் மங்கள பொருட்களை தான் வாங்க வேண்டும்.அந்த வகையில் மஞ்சள், பால், கல் உப்பு, தயிர், சர்க்கரை போன்றவைகளை வாங்குவது நம் வாங்கும் சம்பளம் மேலும் மேலும் அதிகரிக்க கூடிய வாய்ப்புகளை உருவாக்கும். ஏனெனில் மேற்கூறிய பொருள்கள் அனைத்தும் மகாலட்சுமி தாயார் குபேரர் சுக்கிரன் போன்றவர்களுடன் அருளாசி நிறைந்த பொருட்கள். இந்தப் பொருட்களை வாங்கும் பொழுது உங்களுக்கு நிச்சயம் பணவரவு அதிகரிக்க கூடிய வாய்ப்பை ஏற்படுத்தும்.
இந்த பொருட்களை எல்லாம் வெள்ளிக்கிழமை காலை சுக்கிர ஹேரையில் வாங்கும் பொழுது உங்களின் பணவரத்தை இன்னும் அதிகரிக்க கூடிய வாய்ப்பை தரும். இத்துடன் மல்லிகை பூவை வாங்குவதும் பணவரவை அதிகரிக்கும். இவையெல்லாம் நாம் புதிதாக ஒன்றும் நம் நடைமுறைக்கு கொண்டு வரக்கூடிய விஷயங்கள் கிடையாது. நம் வீட்டு முன்னோர்கள் கடைப்பிடித்த பழமையான முறைகள் தான். இன்றைய கால சூழ்நிலையில் நாம் இவையெல்லாம் மறந்து விட்டோம். இதையும் படிக்கலாமே: காலையில் எழுந்ததும் முதலில் சமையல் கட்டில் இதை மட்டும் தொட்டு விடாதீங்க இருக்கின்ற ஐஸ்வர்யமும் போய்விடுமாம் தெரியுமா? நாளெல்லாம் பாடுபட்டு உழைத்து அதற்கான வருமானத்தை மாதத்தில் ஒரு நாள் கையில் வாங்கும் போது அந்த மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. ஆனால் அந்த பணம் ஒரு வாரம் கூட கையில் தங்காமல் செலவழிந்து மறுபடியும் கடன் வாங்கக் கூடிய சூழ்நிலை இன்றளவும் பல குடும்பங்களில் உள்ளது. அப்படி வாங்கும் பணம் கையில் தங்காமல் வீண் விரயம் ஆவதற்கு நாம் செய்யும் சில தவறுகளும் ஒரு காரணம். இதையெல்லாம் நாம் தெரியாமல் செய்திருந்தாலும் தெரிந்து கொண்ட பின்பு மாற்றிக் கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.