NEWS NEWS Author
Title: எளிமையாக கடனை திருப்பித் தர இந்த 2 கிராம்பு போதும். அனுமனை நினைத்து இதை மட்டும் செய்யுங்கள்.
Author: NEWS
Rating 5 of 5 Des:
கடனை திருப்பித் தருவதற்கு முதலில் காசு தேவையில்லை. தைரியம் தான் தேவை. தைரியம் இருந்தால் வாங்கிய கடனை எப்படியாவது திருப்பிக் கொடுத்து விடலாம்...


கடனை திருப்பித் தருவதற்கு முதலில் காசு தேவையில்லை. தைரியம் தான் தேவை. தைரியம் இருந்தால் வாங்கிய கடனை எப்படியாவது திருப்பிக் கொடுத்து விடலாம். தைரியத்தை இழந்து கோழைத்தனத்தோடு கடனை எப்படி திருப்பி தருமோ என்று கொஞ்சம் யோசித்தாலும் நம்முடைய கதை அந்த இடத்தில் முடிந்தது. ஆகவே எதற்கும் பயப்படாதீங்க. கடன் வாங்கும் போது தைரியம் இருந்தது அல்லவா. அதேபோல கடனை திருப்பிக் கொடுக்கவும் மன தைரியத்தை கொண்டு வந்து பிறகு இந்த பரிகாரத்தை செய்யும்போது நிச்சயம் பலன் உண்டு. கடனை திருப்பி தரும் கிராம்பு பரிகாரம்: செவ்வாய்க்கிழமை இரண்டு கிராம்பை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். உள்ளங்கையில் இருக்கட்டும். அப்படியே ஹனுமன் கோவிலுக்கு சென்று அனுமனை வழிபாடு செய்ய வேண்டும். ஹனுமனிடம் உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சினையை சொல்லி கடன் தீர வேண்டும் என்று மனதார வேண்டுதல் வைத்துக் கொள்ளுங்கள். யாருக்கு கடனை திருப்பிக் கொடுக்க வேண்டுமோ, அந்தத் தொகையை மனதார சொல்லி அந்த கடனை திருப்பி தர வேண்டும் என்று வேண்டுதலை வையுங்கள். உள்ளங்கையில் இருக்கும் கிராம்பை எந்த இடத்திலும் கீழே வைக்கக்கூடாது. - 

 அனுமனை மூன்று முறை வளம் வாங்க. கொஞ்ச நேரம் அனுமனின் முன்பாக அமர்ந்து மனதை அமைதிப்படுத்தி தியான நிலையில் வையுங்கள். ஹனுமனின் வலிமையான தோற்றத்தையும், அவர் கையில் இருக்கும் கடத்தையும் பார்க்கும் போதே நமக்கு மன தைரியம் வந்துவிடும். பிறகு வீட்டிற்கு வந்து ஒரு சின்ன மண் அகல் விளக்கை எடுத்து அதில் இந்த இரண்டு கிராம்பை போட்டு கொஞ்சமாக நெய் விட்டு ஒரு கற்பூரம் வைத்து கொளுத்தி விடுங்கள். செவ்வாய்க்கிழமை தோறும் இப்படி இரண்டு கிராம்பை நெருப்பில் போட்டு பொசுக்கினால் உங்கள் கடன் பிரச்சனை நெருப்போடு நெருப்பாக பொசுங்கிவிடும் என்பது நம்பிக்கை. செவ்வாய்க்கிழமை காலை அல்லது மாலை எந்த நேரத்தில் முடிந்தாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். 

இப்படியே வாரம் தோறும் செவ்வாய் கிழமை அன்று ஹனுமன் கோவிலுக்கு இரண்டு கிராம்புகளை எடுத்து சென்று, அதைக் கொண்டு வந்து வீட்டில் எரிக்கும் போது நிச்சயமாக உங்கள் பணப் பிரச்சனை படிப்படியாக குறைய தொடங்கும். இதை செய்துவிட்டு கடனை திருப்பித் தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஏதாவது ஒரு வழியில் பணத்தை திருப்பித் தருவதற்கு உண்டான வழியை அந்த ஹனுமன் உங்களுக்கு நிச்சயம் காட்டிக் கொடுப்பான். இதையும் படிக்கலாமே: மூன்றே வாரத்தில் முழு கடனும் அடைய ஒரு கொப்பரை தேங்காயை வைத்து இதை செய்தால் போதும். இது வரை எந்த பரிகாரம் செய்தும் தீராத கடன் கூட இதை செய்தால் நிச்சயம் தீர்ந்து விடும். அளவுக்கு மீறி, தகுதிக்கு மீறி கடன் வாங்காதீங்க. எத்தனை முறை சொன்னாலும் கடன் பிரச்சனையில் சிக்கிக் கொள்ள சூழ்நிலையை ஒரு காரணம் காட்டக் கூடாது. கடன் வாங்கக்கூடிய சூழ்நிலையில் இருந்து நம்மை வெளியே கொண்டு வருவதற்கான வேலையில் தான் தீவிரமாக ஈடுபட வேண்டும். அயராது உழைத்தால் அந்த உழைப்புக்கேற்ற ஊதியத்தை கடவுள் நிச்சயம் கொடுப்பான். எதையும் சுலபமாக அடைய வேண்டும் என்று நினைக்காதீங்க. நீங்கள் படும் ஒவ்வொரு கஷ்டத்திற்கும் நிச்சயம் பலன் உண்டு, ஆகவே கஷ்டப்பட்டு உழையுங்கள் அதற்கான கூலியை கடவுள் நிச்சயம் உங்களுக்கு கொடுப்பான் என்ற நம்பிக்கை உடன் இந்த ஆன்மீகம் பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

Advertisement

 
Top