காலையில் எழுந்ததும் முதல் வேலையாக உள்ளங்கைகளை அல்லது அதிர்ஷ்டம் தரும் பொருட்களை பார்த்து கண் விழிக்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் குளியல் அறைக்கு சென்று வாய் கொப்பளித்து, முகம் கழுவி விட்டு பின்னர் தான் சமையல் அறைக்கு செல்ல வேண்டும். இப்படி சமையலறைக்கு செல்லும் பொழுது முதன் முதலில் புளியை கைகளால் தொடக்கூடாது என்று கூறப்படுகிறது. புளியை முதலில் தொட்டால் வீட்டில் இருக்கின்ற ஐஸ்வர்யமும் நம்மை விட்டு நீங்கி விடுமாம். அடுத்து சாதம் வடிக்க அரிசியை அரிசி படியிலிருந்து அளந்து எடுப்பதால் ஐஸ்வர்யம் பெருகும். அப்படி அளந்து எடுக்கும் பொழுது மீண்டும் அதில் சிறிதளவு அரிசியை எடுத்து பின்னர் அரிசி பெட்டியில் போட வேண்டும். காலியாக அப்படியே போடக்கூடாது. கல் உப்பு மற்றும் அரிசி மகாலட்சுமிக்கு இணையானதாக கருதப்படுகிறது. மேலும் அன்னபூரணி அதிகம் வாசம் செய்யக்கூடிய இந்த சமையல் அறையில் கல் உப்பு மற்றும் அரிசி குறையாது இருந்தால் அன்னத்திற்கு குறைவே இருக்காது. செல்வம் குறையாது என்பது நம்பிக்கையாக இருக்கிறது.
சமையலறையில் கண்ணாடி இல்லாமல் இருந்தால் நல்லது. அப்படி கண்ணாடி நீங்கள் வைத்திருந்தால் ரசம் போன கண்ணாடியை தெரியாமல் கூட சமையலறையில் வைக்காதீர்கள். இது தரித்திரத்தை ஏற்படுத்துமாம். சமையலறையிலேயே பூஜை செய்யக் கூடியவர்கள் பூஜை அறையில் இருக்கும் கண்ணாடியை சரி பார்த்துக் கொள்ளுங்கள். ரசம் போன பூஜை அறை கண்ணாடி செல்வ இழப்பை ஏற்படுத்தும். சமைத்து முடித்த பின்பு இரவு நேரத்தில் சமைத்த சாதத்தை மொத்தமாக வழித்து எடுக்கக் கூடாது. இரவில் கொஞ்சம் சாதத்தை தண்ணீர் ஊற்றி எடுத்து வைக்க வேண்டும். இரவு நேரங்களில் அன்னலட்சுமி மற்றும் மகாலட்சுமி சமையல் அறையில் குடியிருப்பதாக ஐதீகம் உண்டு. இவர்கள் பசியாற இப்படி சாதத்தை தண்ணீர் ஊற்றி எடுத்து வைக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். இதையும் படிக்கலாமே: மூன்றே வாரத்தில் முழு கடனும் அடைய ஒரு கொப்பரை தேங்காயை வைத்து இதை செய்தால் போதும். இது வரை எந்த பரிகாரம் செய்தும் தீராத கடன் கூட இதை செய்தால் நிச்சயம் தீர்ந்து விடும். இதனால் அவர்கள் மனம் குளிர்ந்து நமக்கு அன்னத்தையும், செல்வத்தையும் வாரி வழங்குவார்களாம். ஏழு பிறவிக்கும் வறுமை நம்மை தொடராமல் இருக்க இத்தகைய எளிய விஷயங்களை கடைப்பிடிக்கலாம். இது நமக்கு மட்டுமல்லாமல் நம்முடைய சந்ததியினரையும் வறுமை இல்லாத, வளமான வாழ்வுக்கு பாதை வகுத்துக் கொடுக்கும். இது நம் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டிய எளிய விஷயங்களாகஆன்மிகம் கூறுகிறது.