NEWS NEWS Author
Title: வீட்டில் வலது பக்கமாக தும்பிக்கையை கொண்ட விநாயகரை வைக்ககூடாது ஏன் தெரியுமா?
Author: NEWS
Rating 5 of 5 Des:
  விநாயகர் சிலையை வீட்டில் வைப்பதற்கு முன் இதே போல் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் சில உள்ளது. இந்த மரபுகள் மற்றும் சம்பிரதாயங்களை...

 

விநாயகர் சிலையை வீட்டில் வைப்பதற்கு முன் இதே போல் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் சில உள்ளது. இந்த மரபுகள் மற்றும் சம்பிரதாயங்களை நீங்கள் பின்பற்றவில்லை என்றால், உங்கள் வீட்டிற்கு துரதிஷ்டம் வந்து சேரும்.


 


உங்கள் வீட்டில் விநாயகர் சிலைகளை பல வழிகளில் வைக்கலாம். ஒரு புகழ் பெற்ற வழி - வீட்டின் முக்கிய நுழைவாயிலுக்கு எதிராக விநாயகர் சிலையை வைப்பது. இந்த திருஷ்டி விநாயகர் உங்கள் வீட்டிற்குள் நுழையும் அனைத்து தீய சக்திகளையும் தடுத்து, வளத்தை கொண்டு வரும் என நம்பப்படுகிறது. விநாயகரை இப்படி வைத்தால் அவர் உங்கள் வீட்டை பாதுகாப்பார்.



விநாயகரை முகப்பு வாயிலில் வைத்தால் ஜோடியாக தான் வைக்க வேண்டும். அதில் ஒன்று நுழைவாயிலை பார்த்த வண்ணம் இருக்க வேண்டும். மற்றொன்று அதற்கு எதிர்புறமாக பார்த்திருக்க வேண்டும். ஏன் என்று தெரியுமா? ஏதேனும் அறையில்  விநாயகர் பின்புறத்தை பார்த்தபடி வைத்தால், வறுமை வந்து சேரும் என்று நம்பப்படுகிறது. அதனால் அதனை ஈடு செய்யும்  விதமாக மற்றொரு சிலையை எதிர் திசையில் வைக்க வேண்டும்.


வலது பக்க தும்பிக்கை கொண்ட விநாயகர் வீட்டிற்கு விநாயகர் சிலை வாங்க வேண்டுமானால், நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று உள்ளது. வலது பக்கமாக தும்பிக்கையை கொண்டுள்ள விநாயகரை தவிர்க்க  வேண்டும்.


வலது பக்கமாக தும்பிக்கையை கொண்டுள்ள விநாயகர் என்றால் பூஜையின் போது விசேஷ கவனமும் பராமரிப்பும் செலுத்த வேண்டும். இவைகளை வீட்டில் செய்வது கடினம். அதனால் தான் இந்த சிலைகளை கோவில்களில் மட்டுமே பார்க்க முடியும். அதனால் வீட்டில் வைக்க வேண்டும் என்றால் இடது பக்கமாக அல்லது நேராக உள்ள அல்லது காற்றில் இருக்கும்  தும்பிக்கையை கொண்ட விநாயகரை வையுங்கள்.

Advertisement

 
Top