NEWS NEWS Author
Title: விபூதி பூசும்போது கடைபிடிக்க வேண்டியவை முறைகள்...!
Author: NEWS
Rating 5 of 5 Des:
  கோவிலில் இறைவனை தரிசித்த பிறகு பிரசாதமாக விபூதி வழங்கி, ஆசிர்வதிப்பது காலம் காலமாய் நடைமுறையில் இருக்கும் ஒரு வழக்கம். கோவிலில் இந்த மரபு ...

 

கோவிலில் இறைவனை தரிசித்த பிறகு பிரசாதமாக விபூதி வழங்கி, ஆசிர்வதிப்பது காலம் காலமாய் நடைமுறையில் இருக்கும் ஒரு வழக்கம். கோவிலில் இந்த மரபு இன்றும் வழக்கில் இருக்கிறது. 


இந்த விபூதியானது அதனை அணிந்து கொள்கிறவர்களை தீவினைகளில் இருந்து  காப்பாற்றும் கவசமாய் இருப்பதுடன், செல்வத்தையும் தருவதாக நம்பப்படுகிறது.


 

திருநீறு பூசும்போது கடைபிடிக்க வேண்டியவை:

 

வெள்ளை நிற விபூதி மட்டும் அணிய வேண்டும். முகத்தை அண்ணாந்து வைத்து நிலத்தில் சிந்தாமல் நடு மூன்று விரல்களினால் நெற்றி  நிறைய பூசவேண்டும்.


நடந்து கொண்டோ படுத்துகொண்டோ பூசக்கூடாது. ஆச்சாரியார், சிவனடியார் இவர்களிடம் விபூதி பெறும்போது அவர்களை வணங்கி பெறுதல்  வேண்டும்.


வடக்கு கிழக்குமுகமாக நின்று தான் திருநீறு பூசவேண்டும். தலையை கவிழ்த்தும் நடுங்கிகொண்டும் வாயை திறந்து கொண்டும்  பேசிக்கொண்டும் திருநீறு பூசக்கூடாது.


 

விபூதி வைத்திருக்கும் கலயத்தை கவிழ்த்து வைக்கக்கூடாது. கோயிலில் விபூதி பிரசாதம் வாங்கும்போது இடது கையை கீழே வைத்து வலது கையை மேலே வைத்து வாங்க வேண்டும்.

 

வாங்கிய விபூதியை ஒரு தாளில் இட்டு நெற்றியில் இட்டு கொள்ள வேண்டும். இடது கை விரலால் நெற்றியில் விபூதி இடக்கூடாது. ஒருவர் திருநீறு தருகிறார் என்றால் வாங்க மறுக்க கூடாது.

Advertisement

 
Top